குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக்கு முன்பே குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறும் எம்ஏசிசி சட்டம் பகுதி 62 அரசமைப்புக்கு முரணானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த தீர்ப்பைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப் தலைமையில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு, அச்சட்ட விதி கூட்டரசு அரசமைப்புடன் முரண்படவில்லை என்றும் அரசமைப்பு அதிகார வரம்பை மீறவில்லை என்றும் கூறியது.
“எனவே, முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எங்களால் ஏற்க முடியவில்லை”, என நீதிபதி ரவுஸ் கூறினார்.
எம்ஏசிசி சட்டம் பகுதி 62 அரசமைப்புக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்தவர் லிம் குவான் எங். அவர்மீதான ஊழல் வழக்கு தொடர்பில் அவர் அவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
அவர்மீதான ஊழல் வழக்கு விசாரணையை முறைப்படி நடத்துவதற்கான ஏற்பாடுகளை பினாங்கு உயர் நீதிமன்றம் 2018 ஜனவரி 10-இல் மேற்கொள்ள வேண்டும் எனவும் ரவுஸ் உத்தரவிட்டார்.
அவங்ககிட்ட ‘ரெடிமேட்’ பதில் தயாராக இருக்கப்பா!