போக்கா 2017, நாளை அமலுக்கு வருகிறது

குற்றத்தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2017 (போக்கா),  நாளை நடைமுறைக்கு வருகிறது.

சம்பந்தப்பட்ட நபர்களை, மின்னணு கண்காணிப்பு கருவிகள் (இஎம்டி) வழி மேற்பார்வையிட, போக்கா 1959 (சட்டவிதி 297) திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கூறினார்.

அச்சட்டத் திருத்தத்தின் வழி, சட்டவிதி 297 அட்டவணை 2-ன் படி, இஎம்டி பயன்படுத்தக்கூடிய புதிய குற்றங்களை அது உள்ளடக்கி உள்ளது.

“இந்தத் திருத்தப்பட்ட சட்டவிதியின் படி, இரண்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களுக்கு எதிராக, போலிசார் சிறந்த வழிவகையை மேற்கொள்வதற்கு இது உதவும்,” என உள்துறை அமைச்சருமான ஷாஹிட் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டின், 29-ஆம் பிரிவின் கீழ், குற்றத்தைத் தடுக்கும் (இரண்டாம் அட்டவணையில் திருத்தம்) ஆணை 2017 மற்றும் 2017-ன் கீழ் குற்றத்தைத் தடுக்கும் சட்டம் (மூன்றாம் அட்டவணை திருத்தம்), நாளை முதல் நடைமுறை படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்டில் நடந்த, ‘போக்கா: குற்றங்களை எதிர்த்துப் போராட புதிய சுவாசம்’ (“Poca: Nafas Baharu Banteras Jenayah”) எனும் அவரின் புத்த வெளியீட்டின் போது, குறிப்பிட்ட ஆட்களைக் கண்காணிக்கவும், சிறைச்சாலையில் கைதிகளை வைப்பதற்கான செலவைக் குறைக்கவும், கைதிகள் மத்தியில் கெட்ட செயல்களைக் குறைக்கவும், குற்றம் செய்பவர்களை அடையாளங்காணவும் இந்த இஎம்டி முறை சட்டத்திருத்தம் பயன்படும் என்று கூறியிருந்தார்.

-பெர்னாமா