பூலாய் அவ்வளவு எளிதில் எதிரணியிடம் வீழ்ந்து விடாது: நூர் ஜஸ்லான்

பூலாய்  நாடாளுமன்ற   உறுப்பினர்    நூர்    ஜஸ்லான்,    சிங்கப்பூரின்  சிந்தனைக்  களமான    Iseas-Yusof Ishak  கழகம்  கூறியிருப்பதுபோல்    அந்த   நாடாளுமன்றத்     தொகுதி   அவ்வளவு   எளிதில்   எதிரணியிடம்   வீழ்ந்து  விடாது   என்கிறார்.

14வது  பொதுத்   தேர்தல்மீது   அக்கழகம்   செய்த   ஆய்வு   முறையான    ஆய்வல்ல.  அது  உண்மை  நிலவரங்களை    அடிப்படையாகக்   கொள்ளவில்லை   என்றாரவர்.

“அது  குறையுடைய   ஆய்வு.  அத்தொகுதியின்   எல்லா   அம்சங்களையும்    அது  கருத்தில்   கொள்ளவில்லை.  பூலாய்   ஒரு  நகர்ப்புற  தொகுதி   என்பதால்    அது  வீழ்ந்து  விடும்   என்கிறார்கள்.  ஆனால்,  அது   அவ்வளவு   எளிதல்ல.

“2013-இல்    கிட்   சியாங்    சுனாமியால் (கிட்  சியாங்   ஜோகூரில்  போட்டியிட்டதால்)     பூலாய்  வீழ்ச்சி  காணும்  என்றுதான்  கருதப்பட்டது.

“கிட்  சியாங்    கேளாங்   பாத்தாவில்   போட்டியிட்டு   வென்றார்.  ஆனால்,  ‘சுனாமி’  பூலாயைத்    தாக்கவில்லை”,  என  நூர்  ஜஸ்லான்   இன்று   ஜோகூரில்  தெரிவித்தார்.

ஜிஇ14-இல்   ஜோகூரில்  பாரிசான்  நேசனல்தான்  பெரும்பாலான   இடங்களை   வெல்லும்    ஆனால்   பூலாய்,  தெப்ராவ்,    பாசிர்  கூடாங்   போன்ற    நாடாளுமன்றத்   தொகுதிகளில்    எதிரணியினர்   வெற்றி  பெறுவார்கள்   என்று   Iseas-Yusof Ishak   கழகம்    தெரிவித்திருந்தது   குறித்து   அவர்  கருத்துரைத்தார்.