நஜிப்: ஜெருசலம் விவகாரத்தில் அம்னோவும் பாஸும் கூட்டாக செயல்பட வேண்டும்

 

புத்ரஜெயாவில் டிசம்பர் 22 இல் பிரதமர் நஜிப்பும் பாஸ் தலைவர் தலைவர்களும் கலந்துகொள்ளவிருக்கும் ஒரு கூட்டத்தில் பாலஸ்தீன மக்களின் அவலநிலையைக் கையாள்வதற்கு தேவைப்படும் பொருத்தமான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இப்பிரச்சனையைக் கூட்டாக கையாள்வதற்கான வழிமுறைகளை அம்னோவும் பாஸும் காண வேண்டும் என்று அம்னோ தலைவர் நஜிப் கூறுகிறார்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகம் பற்றிய முக்கியமான பிரச்சனைகள் என்று வரும்போது ஒரு பொதுவான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்று நேற்று அவர் கூறினார்.

அந்த விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு என்ன என்பதையும் தாம் கூற விருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜெருசலத்தை இஸ்ராலின் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் செயலை கண்டிப்பதற்காக நடத்தப்படவிருக்கும் பேரணியில் தாம் பாஸ் தலைவர் ஹாடியுடன் சேர்ந்துக்கொள்ளப் போவதாகவும் நஜிப் கூறினார்.

சமீபத்தில், இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஒஐசி உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிக்கப்ப போவதாகவும் நஜிப் கூறினார்.

 

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் செயலால் உலக முஸ்லிம் நாடுகள் சினமடைந்துள்ளன.