கிட் சியாங் பிரதமரானால் ‘இன நல்லிணக்கம்’ இல்லை, மசீச கூறுகிறது

 

 

டிஎபியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் பிரதமரானால், அது நாட்டிற்கு பெரும் தீங்காகி விடும் என்று மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லியோ தியோங் லாய் இன்று கூறினார்.

கிட் சியாங் ஒரு கோட்பாடற்ற அரசியல்வாதி. அவர் இனப் பிணக்கத்தை விதைப்பதில் வல்லவர் என்று போக்குவரத்து அமைச்சருமான லியோ கூறிக்கொண்டார்.

பிரதமர் அல்லது துணைப் பிரதமர் ஆகவேண்டும் என்ற இலட்சியம் அவருக்கு இருக்கிறதா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும் என்றும் அந்த மசீச தலைவர் கூறிக்கொண்டார்.

அரசியல்வாதியான அவரை நம்பமுடியாது மற்றும் அவர் இன நல்லிணக்கமின்மையை உருவாக்கி விடுவார் என்று நான் கூறுவேன் என்று பாலோவில் ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று, பாஸ் தலைவர் அப்துல்லா ஹாடி அவாங் டிஎபின் மூத்த தலைவரான கிட் சியாங் பிரதமராகும் ஆசையைக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தது குறித்து கருத்துரைத்த லியோ இவ்வாறு கூறினார்.

முன்னதாக, லியோ அவரது பேச்சில், நாட்டின் மேம்பாடு மற்றும் இன நல்லிணக்கத்திற்கு மக்கள் மசீசவையும் பிஎன்னையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.