ஜெருசலம் பற்றிய டிரம்பின் முடிவுக்காக அமெரிக்காவுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டியதில்லை, ஹாடி கூறுகிறார்

 

ஜெருசலத்தை அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தற்காக மலேசியா அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பது அர்த்தமாகாது என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொல்லி விட்டார்.

ஏன் தெரியுமா? இஸ்லாத்தில் இன்னொரு நாட்டுடனான உறவும் அந்த நாட்டு மக்களுடனான உறவும் இரு வேறுபட்ட விவகாரங்கள் என்று விளக்குகிறார் ஹாடி.

அதனால்தான், நாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் பற்றி பேசும் போது நாம் சும்மா அவரது தீங்குகளைப் பற்றிதான் பேசுகிறோம். அமெரிக்காவிலுள்ள அனைவரும் அவருடன் ஒத்துப்போகவில்லை என்பது நமக்குத் தெரியும் என்றும் ஹாடி கூறிக்கொண்டார்.

ஆகையால், நாம் யாருடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை முறையாகத் தேர்வு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு என்று மலேசியா அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கருத்துரைக்கும்படி கேட்டதற்கு ஹாடி இவ்வாறு கூறினார்.