அம்னோவுக்கு மலாய்க்காரர் ஆதரவு குறைந்து வருகிறது; ஆனாலும் ஹரபான் மகிழ்ச்சி அடைய அதில் எதுவுமில்லை

இன்வோக்கின்   அண்மைய    கருத்துக்கணிப்பில்,  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)   காரணமாக   அம்னோவுக்கு   மலாய்   ஆதரவு  குறைந்து   வருவது   தெரிய  வருகிறது.

அந்தப்  பக்கம்   குறையும்   ஆதரவு   பக்கத்தான்   ஹரபான்  பக்கம்   வருகிறதா   என்றால்   அதுவும்  இல்லை.  மலாய்க்காரர்களின்  ஆதரவைப்   பெற   அது  கடுமையாக  பாடுபட   வேண்டியிருக்கும்போலத்தான்   தோன்றுகிறது.

மும்முனைப்   போட்டி   என்றால்  மலாய்க்காரர்   ஆதரவு   41  விழுக்காடு   அம்னோ/பிஎன்னுக்கும்   14  விழுக்காடு  பாஸுக்கும்   செல்லும்   என்பதை  இன்வோக்கின்  கருத்துக்கணிப்பு   காட்டியது.  இந்த  நிறுவனம்   பிகேஆர்  உதவித்   தலைவர்   ரபிசி   ரம்பியால்    உருவாக்கப்பட்டது.

மலாய்க்காரரிடையே  குறைந்த  ஆதரவு   யாருக்கு  ஏன்றால்  ஹரபானுக்குத்தானாம்.    கருத்துக்கணிப்பு   அப்படித்தான்  காட்டுகிறது   என ரபிசியைத்    தொடர்புகொண்டபோது   அவர்   கூறினார்.

எஞ்சிய   32  விழுக்காட்டினர்  எந்தக்  கட்சிக்கு   அல்லது   எந்தக்  கூட்டணிக்கு    அவர்களின்    ஆதரவு    என்பதைத்    தெரிவிக்க  மறுத்து  விட்டனர்.

இன்வோக்   ஒவ்வொரு  மாதமும்  இப்படிப்பட்ட   கருத்துக்கணிப்புகளை   நடத்தி  வருகிறது.  அம்னோ/  பிஎன்னுக்கு  ஆதரவு   தெரிவித்த    41  விழுக்காட்டினரில்   பாதிப்பேர்    ஜிஎஸ்டி   எடுக்கப்பட   வேண்டும்   என்று   கருத்தையும்   தெரிவித்தனர்.

“இது….அம்னோவுக்கான   ஆதரவு   மேலும்   குறையலாம்   என்பதைக்   காண்பிக்க்கிறது”,  என  இன்வோக்   அறிக்கை  கூறிற்று.

ஹரபானைக்  காட்டிலும்  பாஸுக்குக்  கூடுதல்   ஆதரவு

பாஸுக்கு   ஜனவரி  கருத்துக்கணிப்பில்   இருந்த  25  விழுக்காடு   ஆதரவு   இப்போது   “கிட்டத்தட்ட  பாதி”  குறைந்துள்ளது.

இப்போது    அதற்குள்ள   ஆதரவு   14  விழுக்காடுதான்.  ஆனாலும்,  இது  ஹரபானுக்கு  உள்ள  ஆதரவைவிட   அதிகம்தான்.

ஹரபானுக்கும்   பிஎன்னுக்கும்   நேரடிப்  போட்டி   என்றால்   51  விழுக்காட்டினர்  ஹரபானுக்குத்தான்   தங்கள்   ஆதரவு   என்றனர்.  28  விழுக்காட்டினர்தான்  பிஎன்னுக்கு  வாக்களிக்கப்  போவதாகக்    கூறினர்.

எதிரணிக்கு  மலாய்க்காரர்-  அல்லாதார்   ஆதரவு    2013  தேர்தலுக்குமுன்  எப்படி   இருந்ததோ  அதே   அளவில்தான்  உள்ளது.

சீனர்களின்  ஆதரவு  80  விழுக்காடு.  இந்தியர்களின்  ஆதரவு  40  விழுக்காடு.

பொதுவில்  தேர்தலில்   222  நாடாளுமன்றத்   தொகுதிகளில்   “சுமார்  115”இல்  எதிரணிக்  கூட்டணி  வெல்லும்   என்பதைக்  கருத்துக்கணிப்பு   காட்டுகிறது.இது  அரசாங்கம்   அமைக்கப்   போதுமானது.