நஜிப்: நமது உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டாலும், நாம் சிறிதும் அசைய மாட்டோம்

 

“நமது உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டாலும்” பாலஸ்தீனத்தைத் தற்காக்கும் முயற்சிகளிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை என்று பிரதமர் நஜிப் புத்ரா ஜெயா மசூதியில் இன்று நடைபெற்ற “பாலஸ்தீனத்தைத் தற்காப்போம்” பேரணியில் கூறினார்.

“நாம் பின்வாங்க மாட்டோம். என்ன நடந்தாலும் சரி, நாம் பின்வாங்க மாட்டோம்.

“முப்தி அவரது விளக்க உரையில் கூறியது போல் … எனது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டாலும், ஒரு துண்டு தசை மட்டுமே விடப்பட்டாலும், நான் தொடர்ந்து இந்தக் கோட்பாட்டைத் தற்காப்பேன்”, என்று நஜிப் அங்கிருந்தவர்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையில் நஜிப் கூறினார்.