ஹாடி புத்ரா ஜெயா பேரணிக்கு வரவில்லை

 

புத்ரா ஜெயா பாலஸ்தீன ஆதரவு பேணியில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் காணப்படவில்லை. அவரது உருவப்படம் பிரதமர் நஜிப்பின் படத்தோடு சேர்த்து மேடைக்குப் பின்னால் முதன்மையான நிலையில் காட்சியளித்தது..

ஆனால், ஹாடி அவரது மாரங், திரங்கானு தொகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் சமய உரையாற்றிக் கொண்டிருந்தார்.

புத்ரா ஜெயா பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹாடியை அவரது மகன், பாஸ் இளைஞர் தலைவர், காலிட் அப்துல் ஹாடி பிரதிநிதித்தார்.

பேரணி முடிவுற்ற பின்னர் செய்தியாளர்கள் காலிட்டை சந்தித்த போது ஹாடி ஏன் புத்ரா ஜெயாவில் இல்லை என்பதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை.

மாறாக, ஹாடி எதிர்கால நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்று தாம் நம்புவதாக காலிட் கூறினார்.

மேலும், ஹாடி எப்போதுமே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியர்களையும் அரசாங்கத்தையும் ஒன்றுபட இது அவர் எடுத்துக்கொண்ட முதலாவது முயற்சியல்ல என்றார் காலிட்.