பகாங் பாஸ் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களை பொதுத் தேர்தலில் களமிறக்கத் தயார்

பகாங் பாஸ் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மூன்று அல்லது நான்கு முஸ்லிம் அல்லாதவர்களை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்று மாநில ஆணையர் ரோஸ்லி அப்துல் ஜபார் கூறினார்.

அதன் முஸ்லிம் அல்லாதவர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லிகள் இடம் பெற்றுள்ளனர் என்று அவர் நேற்று பகாங் பாஸ் மாநில தொடர்புக்குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு கட்சி எடுத்த முடிவு முஸ்லிம் அல்லாதவர்கள் பாஸ் ஆதரவு பிரிவின் வழியாக அளித்த பங்களிப்பை அங்கீகரிப்பதாகும் என்று ரோஸ்லி கூறினார்.

பாஸ் 38 மாநிலத் தொகுதிகளிலும் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். அதில் 25 மாநில இருக்கைகளையும் 7 நாடாளுமன்ற இருக்கைகளையும் பாஸ் கைப்பற்றும் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.