‘
கோத்தா பாரு விமான நிலையத்தில் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற எழுத்துப் பிழையுடனான வாழ்த்துத் செய்திக்காக மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெஹாட் (எம்எஎச்பி) மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் அத்தவறான வாழ்த்துச் செய்தியை நேற்றிரவு அகற்றியது.
இத்தவறு வேறு எந்த விமான நிலையத்திலும் நடக்கவில்லை என்று அது உறுதி அளித்தது.
தவறை தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததற்காக எம்எஎச்பி பொதுமக்களுக்கு அதன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
“மன்னிப்பு கோருகிறோம், மெரி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து கூறுகிறோம்”, என்று எம்எஎச்பி அறிவித்தது.