சிலாங்கூரில் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவலில் ஈடுபடப்போவதாகக் கூறப்படுவதை பாஸ் மறுத்தாலும் அவர்களுக்கு பிகேஆர் கதவுகள் திறந்தே இருக்கும் என்கிறார் பிகேஆர் தலைவர் ஒருவர்.
சிலாங்கூரில் 10 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரபானுக்கு ஆதரவாக செயல்பட விரும்புவதாகக் கூறும் செய்திகளை பாஸ் எக்ஸ்கோ இஸ்கண்டர் அப்துல் சமட் மறுத்திருப்பது அவருடைய “தனிப்பட்ட கருத்து” என்றாரவர்.
“கட்சியிலிருந்து வெளியேற அவர்கள் ஆர்வம் காட்டினால் அதை நாங்கள் தடுக்க மாட்டோம், வரவேற்போம்”, என பிகேஆர் மகளிர் துணைத் தலைவர் டரோயா அல்வி கூறியதாக இன்றைய சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“அது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். அது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டியைத் தவிர்க்க உதவும்.
“(பிஎன்னுடன்) நேரடிப் போட்டி நிகழ்வதையே விரும்புகிறோம். அது வெற்றிக்கு உதவும். மக்களுக்காக நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
“மும்முனைப் போட்டி என்றால் பிஎன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக போய்விடும்”,, என்றாரவார்