பெல்டா முன்னாள் தலைவர் இசா முகம்மட், ஜாலான் செமராக் நிலத்தின் உரிமை மாற்றிவிடப்பதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போலீஸ் விசாரணையில் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்.
ஆனால், அவரை யாரும் இன்னும் விசாரணைக்கு அழைக்கவில்லை. இசா பெல்டா தலைவராக இருந்தபோது 2015-இல் செய்து கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தப்படி அந்த நிலத்தின் உரிமை மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“போலீஸ் அல்லது எம்ஏசிசி அழைத்தால் செல்வேன். ஒத்துழைப்பேன்.
“ஆனால், இதுவரை (அதிகாரிகள்) அழைக்கவில்லை”, என இசா இன்று காலை நெகிரி செம்பிலான் தெலோக் கெமாங்கில் தெரிவித்ததாக சினார் ஆன்லைன் கூறிற்று .
“(பெல்டா தலைவர்) ஷாரிர் சமட் போலீசில் புகார் செய்துள்ளார். அவர்கள் விசாரிக்கட்டும்”, என்று கூறிய அவர் அது குறித்து மேலும் விவரிக்கவில்லை.