இராணுவ அதிகாரியின் உடல் ஈயக் குட்டையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது

நெகிரி   செம்பிலான்,  கம்போங்   பெங்காலான்   டுரியானில்   ஒரு  ஈயக்குட்டையில்  மூழ்கியதாகக்  கூறப்படும்   இராணுவ   அதிகாரி   ஒருவரின்   சடலம்  இன்று  காலை   கண்டெடுக்கப்பட்டது.

கோலாலும்பூர்  தற்காப்பு  அமைச்சில்   பணிபுரியும்   அப்துல்  ரஷிட்  ஷாடானின்  சடலம்   காலை  மணி   9.30க்கு   ஈயக்குட்டையில்   மிதக்கக்  காணப்பட்டதாக   போர்ட்  டிக்சன்    போலீஸ்  மாவட்ட  இடைக்கால   சூப்ப்பிரெண்டெண்டண்ட்  முகம்மட்  பைசல்   முகம்மட்  நூர்  கூறினார்.

“அப்துல்   ரஷிட்   எந்த   இடத்தில்    நீரில்   விழுந்தாரோ   அந்த  இடத்துக்கு   600மீட்டர்    தொலைவில்   அவரது   சடலம்   மிதந்து  கொண்டிருந்தது.

“சடலம்    போர்ட்  டிக்சன்  மருத்துவமனைக்கு   அனுப்பப்பட்டது”,  என்றார்.

அப்துல்  ரஷிட்   அவரின்  குடும்பத்தார்   மூவருடன்    அப்பகுதிக்கு   உல்லாசப்  பயணம்   சென்றதாகக்  கூறப்படுகிறது.  அப்போது   அவர்   ஈயக்குட்டையில்  இறங்கியபோது   வலுநீரோட்டம்  அவரை   இழுத்துச்   சென்றுவிட்டதாம்.

-பெர்னாமா

வான