ஆய்வாளர் : ஆசியானில், ஐஎஸ்-சுக்கு எதிரான மிகவும் பாதுகாப்பான நாடு மலேசியா

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பயங்கரவாதத்திற்கு எதிராக மலேசியா சிறந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளது என ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார்.

பயங்கரவாத குழுக்களால் பல தாக்குதல்களைச் சந்தித்த இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு மலேசிய மண்ணில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஒரு தாக்குதலை மட்டுமே நடத்தியது.

சமீபத்திய ஆண்டுகளில், மலேசியக் காவல்துறையினரும் நூற்றுக்கணக்கான பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய வெற்றியாக, கடந்த மாதம் நாடு முழுவதிலும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில், சுமார் 20 இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

“மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை ஒப்பிட்டு

அலெக்ஸாண்டர் மெக்கிலியோட்

பார்த்தால், மலேசியா பாதுகாப்பானது என  நான் நினைக்கிறேன்,” என்று தென்கிழக்காசியப் பாதுகாப்புப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஆய்வாளர், அலெக்ஸாண்டர் மெக்கிலியோட் கூறியுள்ளார்.

“இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள், அவ்விரண்டு அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியா புவியியல் பகுதியால் சிறியது; அதுமட்டுமின்றி அதன் மக்கள் தொகையும் குறைவு.

“மலேசியா ஆர்வமுள்ள, எதிர்-உளவுத்துறையினரைக் கொண்டுள்ளது, இதனால் அச்சுறுத்தல்களை எளிதில் அடங்குவதில் மிகவும் திறம்பட்ட நாடாக விளங்குகிறது,” என்றார் மெக்கிலியோட்.

ஆசியான் பிராந்தியத்தில், ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்த ஆண்டு, மராவி நகரில் நடந்த ஐந்து மாத மிக மோசமான யுத்தத்தில் 1,100-க்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இம்மூன்று நாடுகளுக்குள்ளான பயங்கரவாத இயக்கத்தின் அபாயம், சுலு மற்றும் சிலிபேஸ் கடல்களில் மிக அதிகமாக இருக்கிறது என மூத்த ஆய்வாளரான மெக்கிலியோட் நம்புகிறார்.

“இதன் ஒட்டுமொத்த வெற்றி மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் திறனைப் பொறுத்து இருக்கும், ஒருவருக்கொருவரின் திறமைகளையும் நோக்கங்களையும் நம்புவதோடு, நன்கு ஒத்துழைக்கவும் வேண்டும்.

“மொத்தத்தில், மலேசியாவின் இந்த நேர்மறை கணிப்பு , அதன் பாதுகாப்புப் படைகளின் வலுவான வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது, கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளின் மிக மோசமான தாக்குதல், கோலாலம்பூர் இரவு விடுதி ஒன்றில் சிறிய அளவிலேயே இருந்தது,” என்றும் மெக்கிலியோட் கூறினார்.

ஜூன் 2016-ல், சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள மோவிடா இரவு விடுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் எட்டு பேர் காயமடைந்தனர்.

-ஃப்ரி மலேசியா டுடே