புவாட் : பெல்டாவில் ‘மாஃபியா’ இருக்கிறதா?

பெல்டாவின் இடமாற்றப்பட்ட நிலத்தை மறுபடியும் திருப்பி வழங்குவதில் ஒத்துழைக்க மறுத்தால், கோலாலம்பூர் வெர்டிகல் சிட்டி திட்ட மேம்பாட்டாளரைக் கருப்புப் பட்டியலிட வேண்டுமென டாக்டர் புவாட் ஷார்காசி அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர், அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர்கள் அனைவரையும் பொதுவில் அறிவிக்க வேண்டும் என்றும் கோரினர்.

“பெல்டாவுக்குத் தெரியாமல், ஒரு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியான மேம்பாட்டாளர் நிறுவனம், நில உரிமையாளரை எப்படி மாற்ற முடியும் என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

“அல்லது பெல்டாவில் ஒரு மாஃபியா இதற்கு உடந்தையாக இருக்கிறதா? ஒரு புதிய நிர்வாகத்தின் கீழ் பெல்டா இருப்பதால், வேறு வழியில்லை, மக்களின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க, அதன் சொத்துக்களை எவ்விதமாகவேனும் மீண்டும் பெற்றே ஆகவேண்டும்,” என்று அவர் இன்று தெரிவித்திருக்கிறார்.