ஜெருசலம் விவகாரத்தில் கிறிஸ்துவர்களும் ஒன்றிணைந்துள்ளனர், ஹெர்மன் கூறுகிறார்

 

மலேசிய முஸ்லிம்கள் ஜெருசலம் விவகாரத்தில் தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துவர்களும்கூட ஒன்றிணைந்துள்ளனர், ஆனால் அது அவர்களுடைய தேவாலயங்களுக்குள்ளேயே என்று மலேசிய தேவாலயங்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹெர்மன் சாஸ்திரி கூறுகிறார்.

இங்குள்ள பெரும்பாலான தேவாலயங்கள் ஜெருசலம் பற்றிய விவகாரத்தில் ஐநாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்திற்கு எதிராக நடத்தப்பட்ட பல பேரணிகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் ஆகியோருக்கு ஜெருசலம் ஒரு புனித்தலமாக இருப்பதால், இங்குள்ள தேவாலயங்கள் ஜெருசலம், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டுக்கும் தலைநகரமாக இருக்க வேண்டும் என்ற ஐநாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றன என்று ஹெர்மன் கூறினார்.