எரிபொருள் விலை ‘துருன் துருன்’ கண்டனக் கூட்டத்திற்கு போலீஸ் நிபந்தனைகள் விதித்துள்ளது

 

புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பு டிசம்பர் 31இல் “துருன் ஹர்கா மின்யாக், துருன் நஜிப்” என்ற எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு போலீஸ் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் இன்று கூறினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அலுவலக உறுப்பினர் அஹமட் சூகிரி செ அபு ரசாக் போலீஸ் விதித்துள்ள நிபந்தனைகளில் சிலவற்றை கூறினார்.

டாத்தாரன் மெர்தேக்காவைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் பேச வேண்டும். மேலும், இந்த எதிர்ப்பு கூட்டத்தை ஏற்பாட்டாளர்கள் ஒரு தெரு ஆர்பாட்டமாக்கிவிடக் கூடாது. எதுவானாலும், பேரணி திட்டமிடப்படி நடக்கும் என்று அவர் கூறினார்.

போலீசாரும் தங்களுடைய கடமையை ஆற்றுவர் என்று உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த “துருன் ஹர்கா மின்யாக், துருன் நஜிப்” பேரணியை பக்கத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவும் இதர பல இளைஞர் அரசுசாரா அமைப்புகளும் டிசம்பர் 31 நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத் தொடங்குகின்றனர்.