அமெரிக்க மத்திய உளவுத்துறை (சிஐஏ) வெளியிட்டிருக்கும் World Factbook 2017 தென்கிழக்காசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில்தான் வறுமை விகிதம் மிகக் குறைவாக உள்ளதெனக் குறிப்பிடுவதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார்.
மலேசியாவில் வறுமை விகிதம் 3.8 விழுக்காடுதான். வியட்நாமிலும் தாய்லாந்திலும் 11.3 விழுக்காடு, லாவோஸ் 22 விழுக்காடு, பிலிப்பீன்ஸ் 25.2 விழுக்காடு, மியான்மாரில் 32.7 விழுக்காடு.
மலேசியாவின் தலா வருமானம் யுஎஸ்$27,000 என்பதையும் அது குறிப்பிடுவதாக அமைச்சர் கூறினார். இது தாய்லாந்து (யுஎஸ்$16,800), இந்தோனேசியா (யுஎஸ்$11,700), பிலிப்பீன்ஸ்(யுஎஸ்$ 7,700), மியான்மார்(யுஎஸ் $6,000), லாவோஸ்(யுஎஸ்5,700) ஆகிய நாடுகளின் தலா வருமானத்தைக் காட்டிலும் அதிகம்.
மலேசியா பின்தங்கிவிட்டதாக சில தரப்புகள் கருதினாலும் அது உண்மையில் வெற்றிபெற்றிருப்பதாகக் கூறிய சாலே, இந்தப் புள்ளிவிவரங்களே மலேசியா அதன் அண்டைநாடுகளைவிட கூடுதல் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.