போலீசார், ஜாலான் செமராக் நில விவகாரம் தொடர்பில் பெல்டா முன்னாள் தலைவர் முகம்மட் இசா சமட்டை அடுத்த வாரம் விசாரிப்பார்கள்.
நில உரிமை மாற்றப்பட்ட நேரத்தில் பெல்டா தலைவராக இருந்தவர் என்பதால் இசாவின் வாக்குமூலத்தைப் பெறுவது முக்கியமாகும் என போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.
“வாக்குமூலம் பதிவு செய்ய அடுத்த வாரம் அவரை அழைப்போம். அப்போது பெல்டாவுக்குத் தலைவராக இருந்தவர், அதன் முதலீட்டுத் திட்டங்களில் முடிவெடுப்பவராக இருந்தவர் என்பதால் அவரை விசாரிக்க வேண்டியுள்ளது”, என்று நூர் ரஷிட் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.