கட்டியை அகற்ற கிட் சியாங்கிற்கு அறுவைச் சிகிட்சை

 

டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங்கின் இடது சிறுநீரகத்திலிருந்த கட்டியை அகற்ற மேற்கொண்ட அறுவைச் சிகிட்சை வெற்றிகரகமாக முடிந்தது. அவர் முதல் கட்ட புற்றுநோயிலிருந்து குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவரது மகன் லிம் குவான் எங் கூறினார்.

டிசம்பர் 19 இல், 76 வயதான கிட் சியாங்கின் இடது சிறுநீரகத்திலுள்ள கட்டியை அகற்றுவதற்காக அறுவைச் சிகிட்சை மேற்கொள்ளப்பட்டது. இதிலிருந்து அவர் முற்றிலும் குணமடைவார் என்று அவருக்கு சிகிட்சை அளிக்கும் மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது கிட் சியாங் குணமடைந்து வருகிறார். தமது கால்களை நீட்டி மடக்குவதற்காக அவர் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளார்.

கிட் சியாங் குணமடைந்து வரும் காலத்தில், கெலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில் அவருடையை கடமைகளைக் கவனித்துக் கொள்ள சிறப்பு பிரதிநிதியாக இங் சியம் லுவாங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டிஎபி கெலாங் பாத்தா அலுவலகத்துடன் இணைந்து செயல்படுவார்.