ஹாடி என்எஸ்டி மீது வழக்குத்தொடுக்க வேண்டும், எங் குவான் வற்புறுத்துகிறார்

 

நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்) வெளியிட்ட செய்தியால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கருதினால், அவர் என்எஸ்டி மீது வழக்குத்கொடுக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வற்புறுத்திக் கூறினார்.

இது அவசியாமானது என்று கூறிய குவான் எங், அச்செய்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கைகள் முஸ்லிம் அல்லாதவர்களையும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களையும் நோகச் செய்கிறது என்றார்.

வெளியிடப்பட்ட அறிக்கைகள் உண்மையானவை அல்ல என்றால், ஹாடி என்எஸ்டி மீது வழக்குத்தொடுக்க வேண்டும் என்று குவான் எங் கூறினார்.

வழக்குத்தொடுக்க ஹாடிக்கு தைரியமில்லை என்றால், அது பாஸ் தலைவர் முஸ்லிம் அல்லாதவர்களை அச்சுறுத்துகிறார் என்ற கருத்திற்கு வலுவூட்டும் என்று குவான் எங் மேலும் கூறினார்.

மலேசிய அமைச்சரவை மலாய்க்காரர்களை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும், ஏன்னென்றால் அவர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் என்று ஹரக்கா டெய்லியில் டிசம்பர் 23 இல் வெளியிடப்பட்டிருந்த ஹாடியின் அறிக்கை என்எஸ்டியின் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.