செப் வான் என்று அழைக்கப்படும் செப் ரெட்ஸுவான் நாட்டின் விவகாரங்கள் குறித்து பேசியதற்காக மகாதிர் அவருக்கு நன்றி கூறினார்.
செப் வான் எந்த ஓர் அரசியல் கட்சியிலும், பெர்சத்துவிலும், உறுப்பினராக இல்லை என்பது தமக்குத் தெரியும். எனினும், அவரது கருத்துகளைப் பாராட்டுவதாக மகாதிர் கூறினார்.
செப் வான் எவர் பக்கமும் சாயாமல் நீதி மற்றும் நாட்டின் நலன் குறித்து உண்மையைப் பேசினார் என்று மகாதிர் அவரது முகநூலில் இன்று பதிவு செய்துள்ளார்.
“இதைத்தான் செய்ய வேண்டும் என்று நமது சமயங்கள் நமக்கு கூறுகின்றன, அதனால் நாம் நல்லதை அனுபவித்து கெட்டதை நிராகரிக்க முடியும்…நன்றி, செப் வான்”, என்று முன்னாள் பிரதமர் கூறினார், ஆனால் அவர் எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றியும் கூறவில்லை.
பெல்டா குடியேற்றத்தாரின் மகனான செப் வான், பெல்டாவின் தற்போதைய இக்கட்டான நிலையைக் குறிப்பிட்டு தமது மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்.
குடியேற்றத்தாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல ஆண்டுகளாக போராடியவர்கள் என்ற முறையில் பெல்டாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து கோபமடைகிறோம். நாங்கள் கடுந்துயரமடைந்துள்ளதுடன் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
செப் வான், நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக “அந்தத் திருடர்கள்” நீதியின்முன் நிருத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
ஒரு குடியேற்றத்தாரின் மகன் என்ற முறையில் பெல்டாவில் நடந்து கொண்டிருப்பவை பற்றி நான் ஏன் ஏமாற்றமடைந்தவனாக உணரக்கூடாது மற்றும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் எதையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும், பெல்டாவின் ஜாலான் செமாராக் நிலம் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தப்பட்ட ஊழலை அவரது கருத்து பிரதிபலிக்கிறது.