மகாதிர் முகமட் பிரதமராகவும் வான் அஸிசா துணைப் பிரதமராகவும் நியமிக்க பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்த கருத்தை பிகேஆர் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டாதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.
வட்டாரங்களின் தகவல்படி, இம்முடிவு டிசம்பர் 19 இல் எடுக்கப்பட்டது. இம்முடிவுக்கு அன்வார் இப்ராகிம் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பல பிகேஆர் தலைவர்கள் இது குறித்து மௌனமாக இருக்கின்றனர். பேசக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இம்முடிவு கசிந்ததைத் தொடர்ந்து, சில பிகேஆர் அடிமட்ட உறுப்பினர்கள் சினமடைந்துள்ளனர், ஏனென்றால் மகாதிரீன் 22 ஆண்டுகால ஆட்சி அன்வாரின் சிறைவாசத்திற்கு வழிவகுத்தது என்று அவர்கள் நம்புகின்றனர்.
மகாதிர்-வான் அஸிசா கூட்டுக்கு பிகேஆர் அரசியல் பிரிவு சில நிபந்தனைகளுடன் ஆதரிக்க ஒப்புக்கொண்டது. அன்வாரை விடுவிக்க மகாதிர் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும். அன்வார் பதிவியை ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர் இடைக்கால பிரதமாரக இருப்பதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்கத்தான் ஹரப்பானின் இதர பங்காளிக் கட்சிகள் – பெர்சத்து, டிஎபி மற்றும் அமனா – இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்னொரு வட்டாரம் கூறுகிறது.
தமக்கு மீண்டும் பிரதமராகுவதில் நாட்டம் இல்லை 92 வயதான மகாதிர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
ஆனால், அது அவசியம் என்றால், தாம் லங்காவி அல்லது புத்ராஜெயாவில் போட்டியிட விரும்புவதாக மகாதிர் தெரிவித்துள்ளார்.
ஒர் உருப்படியான மாற்று அரசாங்கத்திர்க்கு வழிகாட்டினால் சரி.
அன்வார் சிறையில் இருக்கும்
சூழ்நிலையில்,மாற்றுதிட்டம்
ஏற்றுக்கொள்ளத்தக்கதே,
ஒரு பெண் துணை பிரதமராவது
மலேசிய வரலாற்றில் பதிவு பெரும்,மகாதிர் விரும்பாவிட்டா
லும் காலத்தின் கட்டாயம்!