பெல்டா நில விவகாரம்: அண்ணனை நினைத்து பரிதாபப்படுகிறார் காலிட்

ஷா  ஆலம்   எம்பி  காலிட்  சமட்,  தம்    அண்ணனும்  பெல்டா   தலைவருமான   ஷாரிர்  சமட்டின்  நிலை  கண்டு   பரிதாபப்படுகிறார்.

2015-இல்  பெல்டாவுக்குச்  சொந்தமான  நிலங்களின்  உரிமை   சந்தேகத்துக்குரிய முறையில்   மாற்றப்பட்டிருக்கிறது.  அதில்  ஊழல்  நிகழ்ந்திருக்கலாம்   என்றும்  நம்பப்படுகிறது.

“அண்ணனை  நினைத்தால்  பாவமாக  இருக்கிறது. உண்மையில்  மிகக்  கவனமாக  இருக்குமாறும்    பயனற்ற  ஒன்றைக்  காக்க  நினைத்து   அவருடைய  பெயரைக்   கெடுத்துக்கொள்ள   வேண்டாம்   என்றும்   அவருக்கு   ஆலோசனை  கூறினேன்”,  என்று  காலிட்   சினார்  ஹரியானிடம்   தெரிவித்தார்.

தம்   அண்ணனுக்கு   “நல்ல  பேர்  இருக்கிறது”   என்றும்   பெல்டாவில்   நிகழ்ந்துள்ள   தவறுகளை  மூடிமறைக்க   அவரைப்   பயன்படுத்திக்கொள்கிறார்கள்   என்றும்   காலிட்   கூறினார்.

அண்ணன்  தம்பி   இருவருமே  வெவ்வேறு  கட்சிகளைச்  சேர்ந்தவர்கள்..

ஷாரிர்,68,  அம்னோவில்  இருக்கிறார்,  அவரின்  இளவல் காலிட்,60, அமனாவில்.

அரசியலில்  வேறுபட்டிருந்தாலும்   இருவருக்கிடையில்   நல்லுறவு   நிலவுகிறது.

“அரசியலில்  வெவ்வேறு   இடங்களில்   இருந்தாலும்   நாங்கள்   எதிரிகள்   அல்லர்.  பிரச்னை  வராதிருக்க   பாதுகாப்பான   வழி  என்னவென்றால்  அரசியல்  பற்றிப்  பேசாதிருப்பதுதான்.

“சில  நேரங்களில்   கருத்துவேறுபட்டு  சண்டையிட்டுக்  கொள்வோம்.  ஆனால்,  அதை  மனத்தில்  வைத்துக்கொள்வதோ   ஒருவரை  மற்றவர்  மட்டம்  தட்ட  முனைவதோ  கிடையாது”,  என்றாரவர்,