ஹரபான் ஜிஇக்குமுன் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்கிறாராம் முகைதின்

பெர்சத்து  தலைவர்   முகைதின்   யாசின்,   அடுத்த  பொதுத்   தேர்தலுக்குமுன்  பக்கத்தான்   ஹரபான்  அதன்  பிரதமர்   வேட்பாளர்   யார்  என்பதை   அவ்சியம்  அறிவிக்க   வேண்டும்   என்று  வலியுறுத்தினார்.   ஒரு   நேர்காணலில்   அவர்  இதைக்    கூறியதாக   த  மலேசியன்  இன்சைட்   தெரிவித்துள்ளது.

தேர்தலில்   ஹரபான்  வெற்றி  பெற்றால்   அரசாங்கத்தை  வழிநடத்தப்போவது   யார்  என்பதைத்   தெரிந்துகொள்ள    வாக்காளர்கள்   விரும்புகிறார்கள்    அவர்களின்  விருப்பத்தைப்  புறக்கணிப்பதோ   கண்டுகொள்ளாதிருப்பதோ   நல்லதல்ல    என்றாரவர்.

“மக்கள்  கேட்கிறார்கள்    பிரதமர்  யார்,  துணைப்   பிரதமர்   யார்   என்று.  அவர்களின்  கேள்வியைப்  பொருட்படுத்தாதிருக்க  முடியுமா,  புறக்கணிக்கத்தான்  முடியுமா?  எனக்கு  எது  முக்கியம்   என்றால்   கட்சியின்  விருப்பமல்ல  மக்களின்  விருப்பம்தான்.

“ முடிவு  செய்வது  எவ்வளவு  சிரமமாக  இருந்தாலும்    பிரதமர்   யார்   என்பதை    ஹரபான்     முடிவு   செய்துதான்  ஆக  வேண்டும்  என்பதுதான்  என்  கருத்து,   பெர்சத்துவின்  கருத்து.  பிரதமர்  யார்  என்பதை  முடிவு  செய்ய  வேண்டும்.  முடிந்தால்  துணைப்   பிரதமர்  யார்   என்பதையும்   தீர்மானிக்க   வேண்டும். அதை  14வது  பொதுத்   தேர்தலுக்குமுன்   அறிவிக்க   வேண்டும்”,  என்று  முகைதின்  கூறினார்.