பிரதமர் பதவியை அலங்கரிக்க, மிகச் சிறந்த தேர்வாக பல வேட்பாளர்கள் மீது மக்கள் விருப்பம் கொண்டிருப்பார்கள்.
அதைப்போல, அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவியாளரான முகமட் சைஃபூல் புகாரி அஸ்லான், அப்பதவிக்கு மிகச் சரியான தேர்வாக இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறார். அதுமட்டுமின்றி, எந்தவொரு தயக்கமுமின்றி, அப்பதவிக்கு மிகவும் பொறுத்தமானவர், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுட்டின் அபு பாக்கார் எனத் தெரிவித்துள்ளார்.
பிரான்சு, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற பெரிய நாடுகளின் தேர்தல் போக்குகளைப் பார்க்கும்போது, 2015-ம் ஆண்டு முதல், அந்நாட்டு மக்கள் தங்கள் தலைவர்களாக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக சைஃபூல் கூறினார்.
“சராசரியாக, அவர்களின் தலைவர்கள் ஒரு புதிய திசையை, புதிய கருத்துக்களை விரும்புவதை விரும்பும் ஒரு தத்துவவாதி, இளைய மற்றும் ஆற்றல் கொண்ட
“பொதுவாக, அம்மக்கள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சோர்வடைந்துள்ளனர். அவர்களின் தலைவர்கள், புதியக் கருத்துகளை விரும்பும் ஒரு தத்துவவாதியாக, இளைஞராக, ஆற்றல் கொண்டவராக இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் ஒரு புதியப் பாதையை விரும்புகின்றனர்.
“மலேசியர்களுக்கு அதற்குத் தயாரா? அல்லது நாட்டை வழிநடத்தும் இளம் தலைவர்களின் திறமையை இன்னும் மக்கள் நம்பவில்லையா?
“மலேசியர்கள் அதற்குத் தயாராக இருந்தால், என்னுடைய கருத்துப்படி, இந்த ஜிஇ14-க்கு மலேசியப் பிரதமர் பதவிக்குத் தகுதியான வேட்பாளர் கைரி ஜமாலுடின் ஆவார்,” என்று அவர் தனது முகநூலில் எழுதியுள்ளார்.
பிஎன் 2018-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், 65 வயதான நஜிப், பிரதமர் பதவியில் இருக்க வேண்டிவரும்.
எதிர்க்கட்சியில், பக்காத்தான் ஹராப்பான், இடைக்காலப் பிரதமராக 92 வயதான மகாதீரை முன்மொழிந்துள்ளது.
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், இந்நிலை மாறுபட்டுள்ளது.
உதாரணத்திற்கு, பிரான்சு தேர்தலில், 39 வயதான எமானுவேல் மேக்ரான், மிக இளைய அதிபராக நியமிக்கப்பட்டார். இதேபோல், கனடாவில் ஜஸ்டின் ட்ருதியூ, 46 வயதில் பிரதமரானார்.
இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தான் எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராக இல்லை, மேலும் இதுவரை கைரியைத் தான் சந்தித்ததே இல்லை, அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சைஃபூல் தெரிவித்துள்ளார்.
‘அரசியலில் புத்துணர்ச்சியை விரும்பும்’ ஒரு சாதாரண மலேசியன் என்ற முறையிலேயே இக்கருத்தைத் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பிலும், அக்கட்சிகளின் தலைவர்கள் ரிட்டாயர்மென்ட் ஏஜ்ஜில் (ஓய்வுபெறும் வயது) இருக்கின்றனர்.
“அவர்கள் ஓய்வு பெறவேண்டியக் காலம் வந்துவிட்டது, அடுத்தப் பொதுத் தேர்தலில், இருதரப்பிலும் இளைஞர்கள் களமிறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்றார் அவர்.
SUTHU KODHUTHAVAN ELLAM PESURANGGAH