டிசம்பர் 31 பேரணி : போராட்டம் தொடங்கும் முன் கைது செய்ய வேண்டாம்

பேரணியைத் தொடங்குமுன், யாரையும் கைது செய்ய வேண்டாம் என, எண்ணெய் விலை குறைப்பு, பிரதமரின் தலைமைத்துவத்தை நிராகரித்தல் அல்லது ‘துருன் துருன்’ டிசம்பர் 31 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரைக் கேட்டுகொண்டுள்ளனர்.

“…….பேரணியைத் தொடங்குமுன், யாரையும் கைது செய்ய வேண்டாம், ஆத்திரமூட்டும் எந்த செயலும் வேண்டாம் எனக் காவல்துறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“இந்த அமைதி பேரணி, அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே ஏற்பாடாகி உள்ளது,” என ‘துருன் துருன்’ பேரணியின் சட்ட ஆலோசகர் வான் அன்வார் வான் இப்ராஹிம் கூறினார்.

கடந்த டிசம்பர் 26, போலிசார் அப்பேரணிக்கு எதிராக சில நிபந்தனைகளை விதித்ததாக, அக்குழுவின் செயலதிகாரி அஹ்மாட் ஷுக்ரி சே அப்துல் ராஷாப் தெரிவித்தார்.

அந்த எதிர்ப்புப் பேரணியை, தெரு ஆர்ப்பாட்டமாக நடத்தக்கூடாது என்று ஏற்பாட்டாளர்களைப் போலிசார் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

-பெர்னாமா