இடைக்கால பிரதமர் நியமனம் பற்றிய முன்மொழிதல் விரும்பத்தாகாதது மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பாஸ் இன்று கூறியது.
அவ்வாறான முன்மொழிதல் அமலாக்கப்பட்டால் அது ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தைப் பிரதிபலிக்காது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் இனறு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
மலேசியாவில் ஓர் அரசியல் கட்சி அது 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓர் இடைக்கால பிரதமர் நியமிக்க வேண்டும் என்ற அதன் முன்மொழிதல் விரும்பத்தகாதது மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பது பாஸின் கருத்து என்றாரவர்.
இந்த முன்மொழிதல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 43 மற்றும் பிரிவு 40 (2) க்கும் முரணானது என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு தற்காலிக” பிரதமர் நியமிக்கப்படும் நடைமுறை நல்லதல்ல, ஏனென்றால் அது வலுவான மற்றும் நிலையான ஆளுகையைப் பிரதிபலிக்காது”, என்று தக்கியுடன் மேலும் கூறினார்.
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு பிகேஆர் ஒப்புக்கொண்டுள்ளது என்ற செய்தி குறித்து கருத்துரைத்த தக்கியுடின் இவ்வாறு கூறினார்.
அட, அதி புத்தி சாலிகளா ! உங்க தலைவன் கிட்ட கேளுங்கடா, மற்ற சமயத்தவர்கள் அமைச்சராவதை எந்த சட்டம் தடுக்குதுனு? நாடாளுமன்றத்தில் ஷரியா நீதிமன்ற (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 யை அரசியலமைப்பு சட்டத்திற்கு ஒப்பவா உன் தலைவன் சமர்பித்தான்.