வேலை இழந்தால், அரசாங்கம் 600 ரிங்கிட் வழங்கும்

இவ்வாண்டு தொடக்கம், காப்புறுதி திட்டச் சட்டம் 2017-ன் கீழ், வேலை இழந்தவர்கள் மாதந்தோறு 600 ரிங்கிட்டை, மூன்று மாதங்களுக்கு இடைக்கால உதவியாகப் பெறும் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.

இத்திட்டம், வேலை காப்புறுதி அமைப்பு (எஸ்ஐபி) மூலம், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது என, மனித வளத்துறை அமைச்சர் ரிச்சார்ட் ரியோட் தெரிவித்தார்.

“எஸ்ஐபி மூலம், வேலைவாய்ப்பு சேவை அதிகாரிகள், வேலை இழந்த தொழிலாளர்களுக்குப் புதிய வேலைகளைப் பெற்றுத் தரவும் உதவுவார்கள்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிவாரணத்திற்காக விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள், அவர்களின் பணிச்சூழலமைப்பை மேம்படுத்துவதற்காக, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) கட்டுப்பாட்டில் உள்ள வேலைவாய்ப்பு திட்டத்திலும் பங்கேற்க வேண்டும்.

இடைக்கால உதவிக்கான விண்ணப்பங்களை www.perkeso.gov.my/sip -இன் ஆன்லைன் போர்ட்டல் வழியாக அல்லது நாடு முழுவதும் உள்ள சொக்சோ அலுவலகங்களில் செய்யலாம்.

எஸ்ஐபி செயலாக்கம் பற்றியக் கூடுதல் தகவல்களைப் பெற, 1300 22 8000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சொக்சோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.