பக்கத்தான் ஹரபானில் உள்ள நான்கு கட்சிகளும் ஒத்துக்கொண்டால் மட்டுமே தாம் பக்கத்தான் ஹரபானின் பிரதமர் வேட்பாளராக முடியும் என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.
“நான்கு கட்சிகளும் என்ன முடிவெடுத்தாலும் அதை நான் ஏற்பேன்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரபான் கட்சிகளில் மூன்று அவரையும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலையும் முறையே பிரதமர், துணைப் பிரதமர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிட முடிவு செய்திருப்பதாகக் கூறும் மலேசியாகினி செய்தி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அவர், பிகேஆர் ஒன்றும் தெரிவிக்காமல் இருப்பது குறித்து தமக்கும் எதுவும் தெரியாது என்றார்.
“என்னிடம் அது குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை”, என்றார்.
ஜனவரி 7-இல் நடைபெறும் அதன் தேசிய மாநாட்டில் ஹரபான் மகாதிரை அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளை, 92வயது நிரம்பிய அரசியல்வாதி ஒருவரை “இடைக்காலப் பிரதமராக நியமிப்பது” குறித்து அக்கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதும் மலேசியாகினிக்குத் தெரிய வந்துள்ளது.
இவ்விவகாரத்தில் வியாழக்கிழமை நடைபெறும் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு காணமுடியாது போயின் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிவைக்கப்படும் என உயர்நிலை வட்டார