செரே அணைக்கட்டு உடையப்போகிறதா? பொய்யான செய்தி- போலீஸ்

சுங்கை  லெம்பிங்கில்  செரே  அணைக்கட்டு   உடையப்போவதாக    சமூக   வலைத்தளங்களில்   வைரலாகும்   செய்தியை   நம்ப    வேண்டாம்.

இவ்வாறு  கூறிய   குவாந்தான்  போலீஸ்  மாவட்டத்   தலைவர்   ஏசிபி   அப்துல்   அசீஸ்   சாலே,  பொதுமக்கள்   முகநூல்,  வாட்ஸ்எப்  முதலிய   சமூக  வலைத்தளங்களில்   தவறான     தகவல்களைப்   பரிமாறிக்கொள்வதை   நிறுத்த   வேண்டும்   என்றும்    கேட்டுக்கொண்டார்.

“உண்மையல்லாத     செய்திகளை  வைரலாக்க    வேண்டாம்.  அப்படிப்பட்ட   செய்திகள்   உங்களுக்கு வந்தால்    அழித்து   விடுங்கள்.  உங்களுக்கு  உறுதியாக    தெரியவில்லை    என்றால்   அதிகாரிகளிடம்   கேட்டுத்   தெரிந்து   கொள்ளுங்கள். வெள்ளப்   பெருக்கு  ஏற்படும்   காலங்களில்   பொய்ச்  செய்திகளைப்  பரப்புவதில்   சிலர்   ஆர்வம்   காட்டுகிறார்கள்.

“இது      மக்களிடையே  கலக்கத்தை    உண்டுபண்ணும்……….அவர்களின்  நோக்கம்   என்னவென்று    தெரியவில்லை….ஆனால்,  அது   பீதியை  ஏற்படுத்தி   விடுகிறது”,  என்றவர்   சொன்னார்.

சமூக   வலைத்தளங்களில்   வைரலாகியுள்ள      அச்செய்தி,   அணைக்கட்டு   எந்த  நேரத்திலும்   உடையலாம்   என்று   பகாங்  நீர்  நிர்வாக  நிறுவனம்   எச்சரிக்கை   விடுத்திருப்பதாகக்  கூறியது.

நேற்று  முதல்   பரவிக்  கொண்டிருக்கும்   அச்செய்தியால்   குவாந்தான்   மக்கள்    அணை  உடைந்தால்   தங்களைக்   காப்பாற்றிக்கொள்ளும்   ஏற்பாடுகளைச்   செய்து  வருவதாகக்   கூறப்படுகிறது.