கடந்த வாரம் 1 சென் குறைந்த, ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் விலை இவ்வாரம் 3 சென் உயர்கிறது.
அதேசமயம், கடந்த வாரம் 3 சென் உயர்ந்த டீசலின் விலை, இவ்வாரம் 6 சென் உயர்கிறது.
இன்று நள்ளிரவு தொடக்கம், ரோன் 95-ன் விலை லிட்டருக்கு ரிம2.29, ரோன் 97 லிட்டருக்கு ரிம 2.56 மற்றும் டீசல் லிட்டருக்கு ரிம 2.32 ஆக விற்கப்படும்.
சற்றுமுன், உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு இப்புதிய சில்லறை விலையை அறிவித்தது.
கடந்த மார்ச் 30-ம் தேதி முதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாராந்திரமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் படிப்படியாக எண்ணை விலை குறையும். அதற்கு ஏதுவாக இப்பொழுதே உச்சத்திற்கு ஏற்றி விட்டு பின்னர் குறைத்தால் அரசாங்கதிர்க்கு நட்டமில்லை. அதேவேலையில் மக்களின் வாக்குகளைப் பெற இது ஒரு நல்ல நாடகமாக அமையும். இப்படியும் ஓர் அரசாங்கமா?
மக்களின் சுமைகளை அரசாங்கம் எவ்வாறு புறிந்து வைத்து உள்ளது என்று புரியவில்லை. மக்களின் சுமைகள் நாள் தோறும் அதிகரிது கொண்டே போகிறது. பிரதமர் மனதில் என்ன இருகிறது என்று புரியவில்லை. சுமார் ஐம்பது ரிங்கிட் கடைக்கு கொண்டு சென்றால் அது இப்போது ஐந்து ரிங்கிட் போல உள்ளது. சுமார் சாராசரி அறுபது விளுகடினர் இன்னும் மாதம் இரண்டு ஆயிரத்து ரிங்கிட் சம்பளம் வாங்கும் ஒரு ஐந்து பிள்ளைகளுக்கு குடும்பஸ்தர்கள் அதிகம். அவர்களின் வாழ்க்கையை நினைது பாருங்கள். உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு இந்த சுமைகள் தெரியது. பாவம் மக்கள் தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து… அரிசி, பால், மாவு என கொடுத்து ஓட்டு வேட்டையடி தேர்தலில் வென்று விடுகிறார்கள். இது நமக்கு இனி வேண்டாம். நமது நாட்டில் என்ன வளம் இல்லை. இது ஒரு சொர்க்க பூமி தானே. அதில் நாம் மிகவும் சந்தோஷம்மாக வாழ வேண்டும். அனால் நடப்போதோ வேறு விதமாக உள்ளது. எங்கே தவறு நடகிறது. அன்று உள்ள பிரதமர் கிழக்கை நோக்குவோம் என்று சொல்லி நம்மை திசை திருப்பினர். தோட்டம், விவசாயம், என மாறி தொழில் நுட்பம் கணினி என மாற்றி நம்மை திசை மாற்றினார். அனால் அது ஒரு வகையில் நன்மை யாயினும் மக்களுக்கு எவ்வகையில் நன்மை கொண்டு வந்தது என்று தெரியவில்லை. உலகில் பல நாடுகள் இன்னும் உற்பத்தி விவசாயம் எனும் முறையில் செல்வ செழிப்போடு இருக்கின்றன. பக்கத்து நாடு சிங்கப்பூர் அவர்களுக்கு நிலம் இல்லை விவசாயம் செய்யவதற்கு. அதனால் அவர்கள் வேறு விதமாக யோசித்து தன் நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தார்கள். அனால் நமது நிலையோ வேறு.. நமக்கு நிறைய நிலங்கள் உள்ளன பல மாதிரி சிந்தித்து இருக்கலாம். நம் பிரதமர் கிழக்கை நோக்குவோம் என சென்றல்களே தவிர இங்கே உள்ள நிலங்களை கவனிக்க மறந்துவிட்டு வேறு விதமாகவும் யோசிக்கிறேன் சிந்திக்கிறேன் என நம்மை சிந்திக்க வைத்து இருகிறார்கள். சும்மா விரிந்து கிடக்கும் பல நிலங்களை தவனை முறையில் மக்களுக்கு கொடுது விவசாயம் செய்ய ஊக்குவிப்பு கொடுத்தால் நமது நாடு செல்வ செழிப்போடு இருக்கும். அதை விடுது வரி சுமை விலை வாசி என நம்மை அழ வைகிறார்கள். வேண்டாம் நமக்கு விலைவாசி, யோசிப்போம் சிந்திப்போம் இனி செய்வார்களா…தலைவர்கள்…நன்றி