பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் கருத்தில் கட்சியிலிருந்து விலகிய பாஸ் எம்பி மாபுஸ் ஒமாட் “எப்பவோ இறந்து விட்ட ஒரு மனிதர்”.
அந்த பொக்கோக் சேனா எம்பி கட்சியிலிருந்து வெளியேறியது குறித்துக் கருத்துரைத்தபோது ஹாடி அவ்வாறு கூறினார்.
“அவர் நீண்ட காலத்துக்கு முன்பே மறித்துப்போன மனிதருக்குச் சமம். இப்போதுதான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது”,என ஹாடி இன்று காலை முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் கூறினார்.
மனைவி, பிள்ளைகளுடன் பாஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மாபுஸ் சுயேச்சை எம்பியாக இருக்கப் போகிறாரா, இன்னொரு கட்சியில் சேரப்போகிறாரா என்று தெரியவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை.
உண்மைதான் , பல மாதங்களாகவே மாபூஸ் கட்சியின்
நடவடிக்கைகளுக்கு எதிராகவே கருத்து கூறி வருகிறார் ,
அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ; மானம்,
ரோசம் இருந்திருந்தால் ,,,,,, ! பாஸ் கட்சியினர் !
இப்போது செத்து போனவர் என கூறி அவர் மீது கல் எரிவது
வெட்கங்கெட்ட செயலே ஆகும் !