மலேசியா ஏற்கனவே அறிவித்ததுபோல் 2020-இல் சமச்சீர் பட்ஜெட் என்ற இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று கூறும் இரண்டாவது நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனி, அதற்கு மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்றார்.
“2020க்குள் சமச்சீர் பட்ஜெட்டைக் காண முடியும் என்று நான் நம்பவில்லை. அதை அடைவதற்குப் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்”, என்றவர் ஒரு மாநாட்டில் கூறினார்.
“அதனால் காலத்தை நீட்டி 2022-23-இல் இலக்கை அடைய முயல்வோம்”.
2017-இல் மூன்று விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறை நிலை இவ்வாண்டில் 2.8 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்றும் ஜொகாரி குறிப்பிட்டார்.