அன்வார் ‘மக்கள் குரலை’ ஹரப்பானுக்கு நினைவூட்டுகிறார்

 

இவ்வார இறுதியில் பக்கத்தான் ஹரப்பான் மாநாடு நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டில் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அக்கூட்டணியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஹரப்பானின் வலிமை “மக்களின் குரலில்” இருக்கிறது என்று அக்கூட்டணியின் நான்கு உறுப்பியக் கட்சிகளுக்கும் நினைவுறுத்தல் செய்துள்ளார்.

ஆகையால், அரசுசாரா அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்தாலோசிக்கும் பாரம்பரியம் நிலைநிறுத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்று அன்வார் கூறுகிறார்.

ஹரப்பானில் உடன்பாடு இருக்க வேண்டியதை வலியுறுத்திய அன்வார், அபரிதமான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

இந்தப் பண்புமிக்க கோட்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட் அன்வார், மற்ற முக்கியமற்ற, அவசரமற்ற பிரச்சனைகளை விவாதங்கள் வழி தீர்த்துக்கொள்ளலாம் என்று மேலும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான நிகழ்சி நிரலைத் தயாரிப்பதர்காக ஹரப்பான் தலைவர்கள் கூடுகின்ற வேளையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.