சீன சமூகத்தின் ஆதரவு பிஎன் –னுக்கு திரும்பிவருகிறது எனும் நம்பிக்கை உள்ளதால், 14-வது பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்திக்கும் எனும் ஆருடங்களை மசீச உதறிதள்ளியது.
“நாங்கள் பொதுத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். மக்களின் ஆதரவு தேவை. நாங்கள் நேர்மையானவர்கள், இந்நாட்டை உருவாக்க வேண்டும் எனும் இலக்கு எங்கலிடம் உண்டு,” என்று கட்சியின் தேசியத் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார்.
“மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். இப்போது நாம் முன்னோக்கி நகர்ந்துள்ளோம். கடந்த காலங்களிலிருந்து நாங்கள் படிப்பினை பெற்றுள்ளோம், எனவே, மீண்டும் தவறுகள் நடக்காது,” என்று அவர் கூறினார்.
இன்று காலை, மசீச – கெராக்கான் ‘ஒற்றுமையில் வலிமை’ பேரணியில் கலந்துகொண்ட பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், பிஎன் உறுப்புக்கட்சிகளான அவை இரண்டும், மோசமான தேர்தல் முடிவுகளைக் கண்டன. மசீசவில் தற்போது 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கெராக்கானுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
இதற்கிடையில், கெராக்கான் பினாங்கு மாநிலத்திற்கான தனது முதல்வர் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தலைவர் மா சியு கியோங் தெரிவித்தார்.
“எங்களிடம் திறமையான வேட்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் முதல்வர் வேட்பாளர் பற்றி இதுவரை விவாதிக்கவில்லை. முதலில் நாங்கள் வெற்றி பெறுகிறோம்,” என்று மா கூறினார்.
பி.என். தற்போதை கூட்டணி கட்சிகள் நிலைக்குப் பதிலாக, மலேசியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாக உருவாக வேண்டும் எனும் தனது விருப்பத்தையும் அவர் வெளிபடுத்தினார்.
“எதிர்காலத்தில் பிஎன் ஒரு கட்சியாக இருக்கும் என்பதை நான் இன்னும் நம்புகிறேன். 1950- களில், அப்போதைய நிலைமை இனக் கட்சிகளை வலுப்படுத்தியது, ஆனால் இப்போது கூட டாக்டர் மகாதிர் பெர்சத்து கட்சியை அமைத்ததை நீங்கள் காண்கிறீர்கள்,” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மலாய்க்காரர்கள் மட்டும் உறுப்பியம் கொண்ட ஓர் எதிர்க்கட்சியை உருவாக்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர், கெராக்கானின் இளைஞர் தலைவராக இருந்தபோது, பிஎன் ஒரே கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை மா முதன்முதலாக முன்வைத்தார்.
பி.என். உறுப்புக்கட்சிகள் இனம் சார்ந்ததாக இருந்தாலும், அணுகுமுறையில் பிஎன் பல்லினங்களையும் அரவணைத்தே செல்கிறது என்று லியு இதற்குக் கருத்துரைத்தார்.