ஜோகூர் அமனா கட்சி இன்றைய பக்கத்தான் ஹரபான் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இட ஒதுக்கீடுமீது கொண்ட அதிருப்தியே காரணமாகும்.
“ஐந்து நாடாளுமன்ற தொகுதிகள் கேட்டிருந்தோம், இரண்டுதான் கிடைத்தது- பாரிட் சூலோங்கும் பூலாயும்.
“அதனால் மாநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறோம். ஜோகூர் அமனா தலைவர்கள் அனைவருமே செல்ல மாட்டார்கள்”, என ஜோகூர் அமனா தலைவர் அமினுல்ஹூடா ஹசான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜோகூரில் 24 நாடாளுமன்ற இடங்கள். அவற்றில் டிஏபி நான்கையும் பிகேஆர், பெர்சத்து ஆகியவை தலா ஒன்றையும் வைத்துள்ளன.
13வது பொதுத் தேர்தலில் பூலாயில் பாஸ் கட்சியின் சலாஹுடின் ஆயுப் போட்டியிட்டார். ஆனால் அவர் அம்னோவின் நூர் ஜஸ்லான் முகம்மட்டிடம் 3,226 வாக்கு வேறுபாட்டில் தோற்றார்.
பேராக் அமனாவும் இடஒதுக்கீடு மீது அதிருப்தி கொண்டுள்ளது. அதனால் அதன் தலைவர் அஸ்முனி அவி மாநாட்டுக்குச் செல்லவில்லை.
“இடஒதுக்கீடு காரணமாக நான் போகவில்லை.
“ஆனால், மற்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.