பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், சாபா மாநிலத்தைப் பாதிக்கக்கூடிய பொய்யான செய்திகளை நம்பி ஏமாந்து போக வேண்டாம் என்று அம்மாநில மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அந்தப் பொய்யான செய்திகள் அம்மாநிலத்தின் பல்லின, பலசமயங்களைக் கொண்ட சமுதாயத்தில் நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும் என்றாரவர்.
“வேற்றுமைதான் நம் பலம். அதனால் பொய்யான செய்திகளிடம் ஏமாந்துவிட வேண்டாம்.
“தேர்தல் நெருங்க, நெருங்க அபத்தமான செய்திகள் நிறைய வரும். இன ஒற்றுமையை, குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்துவரிடையே ஒற்றுமையைக் கெடுப்பதே அவற்றின் நோக்கம்”, என்றாரவர்.
கோட்டா பெலுட் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான், நேற்றிரவு கோட்டா பெலுட்டில் நடைபெற்ற கிறிஸ்மஸ், புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டார்.