பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று முறைப்படி ஹரப்பான் இன்று அறிவித்தது. துணைப் பிரதமர் வேட்பாளராக டாக்டர் வான் அசிஸ் வான் இஸ்மாயில் அறிவிக்கப்பட்டார்.
இன்று ஷா அலாமில் நடைபெற்ற ஹரப்பான் மாநாட்டின் இறுதியில் இந்த அறிவிப்பை ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா செய்தார்.
மகாதிர் பிரதமர் வேட்பாளர் மற்றும் வான் அசிஸா துணைப் பிரதமர் வேட்பாளர் என்று நாம் அறிவிக்கிறோம் என்று ஹரப்பான் தலைவர்களால் கையொப்பமிட்ட ஜனவரி 6 ஒப்பந்தத்தை வாசிக்கையில் சைபுடின் கூறினார்.
ஹரப்பான் ஆட்சியில் அமர்ந்ததும், புதிய அரசாங்கம் அன்வாரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கும். அவரது விடுதலை ஜூன் 8 இல் இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்வார் அடுத்த பிரதமர் என்று ஹரப்பான் முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், இப்புதிய ஏற்பாட்டிற்கு அவர் இணங்கியுள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வாசித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இருவருக்கும் வாழ்த்துகள். ஒரு பெண் துணைப்பிரதமரை ஹரபான் அறிவித்தலில் புதியதோர் சாதனையை மலேசியா சந்தித்துள்ளது.