14வது பொதுத் தேர்தல் தேதி குறித்து பல ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் கலைக்கப்படலாம் என்கிறார்.
“அமைச்சரவைக் கூட்டத்தில் 6வது நாடாளுமன்றக் கூட்டத்தை மார்ச் 5 முதல் ஏப்ரல் 4வரை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
“கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நாடாளுமன்றம் கலைக்கப்படுவது சாதாரணமாக நடப்பதில்லை”, என்று நஸ்ரி கூறியதாக பெர்னாமா நேற்று அறிவித்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி,, பிப்ரவரியில் வரும் சீனப்புத்தாண்டுக்குப் பிறகு 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று கோடி காட்டியிருந்தார்.
ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பொருத்தவரை 2016இலிருந்து தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி வருகிறாரே தவிர உறுதியாக எதையும் கூறவில்லை.
ஆனால், தேர்தல் தொடர்பாகக் கூறப்படும் ஆருடங்களை இரசிக்கிறார்.
2016இலேயே, “ஆருடங்களை எல்லாம் இரசிக்கிறேன். ஆருடங்கள் தொடரட்டும்”, என்று கூறியவர் அவர்.