கோலாலம்பூரில் போட்டியிட தங்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற ஏமாற்றத்தால், அக்கூட்டரசுப் பிரதேசத் தலைவர் பதவியைத் தான் இராஜினாமா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை டாக்டர் ஹத்தா ரம்லி மறுத்துள்ளார்.
அப்பதவியில் தான் இன்னும் நிலைத்திருப்பதாகவும், பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக்கட்சிகளுக்கிடையே நாற்காலி பகிர்வு, பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே நடந்ததால், தனக்கு அதில் எந்தவொரு அதிருப்தியும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜொகூர் அமானா தலைவர் அமினோல்ஹுடா ஹாசானின் குற்றச்சாட்டுகளைப் பற்றி கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.