பெர்காசா: இட ஒதுக்கீடு, பிகேஆருக்குப் பெரும் பேறு, பெர்சத்துக்கு மூன்றாம் தர தொகுதிகள்

பக்கத்தான்  ஹரபான்    தீவகற்ப   மலேசியாவில்   நாடாளுமன்ற   இடங்களில்   பெரும்பகுதியை   பெர்சத்துக்கு  ஒதுக்கியிருக்கலாம்   ஆனால்,   இட  ஒதுக்கீட்டில்  பெரும்  வெற்றி  பிகேஆருக்குத்தான்   என்று  கூறுகிறார்  பெர்காசா   தலைவர்  இப்ராகிம்.

மூன்று   தவணைகள்   பாசிர்  மாஸ்   எம்பி-ஆக  இருந்துள்ள  இப்ராகிம்,  பிகேஆர்   அதற்கு   ஒதுக்கப்பட்ட    இடங்களில்   வெற்றிபெற  நிறைய   வாய்ப்புள்ளது     என்றார்.  ஆனால்,  பெர்சத்துக்குக்  கிடைத்திருப்பவையோ   “மூன்றாம்  தர  இடங்கள்” .

அந்த  இடங்களில்  பெர்சத்து  வெல்வது   கடினம்  என  இப்ராகிம்   நினைக்கிறார்.

“இட  ஒதுக்கீட்டில்  பெரிய  வெற்றிக்கு   பிகேஆருக்குத்தான்……அது  களமிறங்கும்   இடங்களின்  வாக்காளர்களை  வைத்துப்  பார்க்கையில்  அது  வெற்றிபெற   நிறையவே  வாய்ப்பு  உள்ளது.

“பெர்சத்துக்கு  52 இடங்கள்.  பிகேஆரைவிட  ஒன்று  கூட.  ஒரு  புதிய   கட்சிக்கு  52  இடங்கள்   கொடுக்கப்பட்டிருப்பதைப்  பாராட்டத்தான்  வேண்டும்.

“ஆனால்,  அவப்பேறாக  அதற்கு  ஒதுக்கப்பட்ட   இடங்களைப்   பார்த்தால்   எல்லாம்   ‘மூன்றாம்   தர’  இடங்கள்”,  என  இப்ராகிம்  இன்று  கோலாலும்பூரில்   தெரிவித்தார்.

“இந்த   இடங்களில்    அவர்கள்   போட்டியிடலாம்.  ஆனால்,  வெற்றி  பெறுவது  எளிதல்ல.  ஏனென்றால்,  அந்த  இடங்களை   வைத்திருப்பவர்கள்  பிஎன்  பெரும்புள்ளிகள்”,  என்றார்.