பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பிஎஸ்எம்) இடையே பேச்சுவார்த்தைகள் நடத்த இன்னும் கொஞ்சம் வாய்ப்புள்ளது, ஆனால் சுங்கை சிப்புட்டில் தற்போதைய எம்பி டாக்டர் ஜெயக்குமாரையே அத்தொகுதி வேட்பாளராக பிஎஸ்எம் நிறுத்தினால், ஹராப்பான் விட்டுக்கொடுக்க தயார் என்று டிஏபி கூறியுள்ளது.
14-வது பொதுத் தேர்தலில், பிஎஸ்எம் போட்டியிடும் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில், நான்கில் மும்முணைப் போட்டி நடைபெறவுள்ளது, அதனைச் சந்திக்க தாங்கள் தயார் என்று டிஏபியைச் சார்ந்த அந்தோணி லோக் தி மலேசியன் இன்சைட்-டிடம் தெரிவித்துள்ளார்.
“அவர்களை (பிஎஸ்எம்) முழுமையாகப் புறக்கணிக்க மாட்டோம், குறைந்தபட்சம் சுங்கை சிப்புட்டில், டாக்டர் ஜெயகுமார் பிகேஆர் டிக்கெட்டில் தொடர்ந்து போட்டியிட, ஹராப்பான் கூட்டணிக்கட்சிகள் ஓர் உடன்பாட்டைச் செய்துள்ளன,” என்று அவர் கூறினார்.
பேராக் டிஏபி அத்தொகுதியில் போட்டியிட விரும்பியபோதும், பிகேஆர் டிக்கெட்டில் டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டால், அத்தொகுதியை விட்டுக்கொடுக்க டிஏபி முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மற்ற நான்கு இடங்களிலும் – பத்து காஜா, சுபாங், கேமரன் மலை மற்றும் உலு லங்காட்- ஹராப்பான் பிஎஸ்எம்-உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, காரணம் தீபகற்பத்தில் தனது இருக்கைகளுக்கான இறுதி பேச்சுவார்த்தையை ஹராப்பான் முடித்துகொண்டது என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, பிஎஸ்எம் ஹராப்பானுடன் ஒத்துழைக்காது என்றும், சுங்கை சிப்புட்டில் பிஎஸ்எம் சின்னத்திலேயேப் போட்டியிடவுள்ளதாகவும் டாக்டர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பிஎஸ்எம் மற்ற இடங்களில் போட்டியிடாமல் இருந்தால் மட்டுமே, சுங்கை சிப்புட்டை தங்களுக்குக் கொடுப்பதாக ஹராப்பான் கூறியுள்ளது என்று டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“ஆக, எங்களால் நிச்சயமாக அதற்கு உடன்பட முடியாது,” என்று அவர் கூறினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிஎஸ்எம் 5 நாடாளுமன்றம் மற்றும் 15 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
கூடி நின்றால் கோடி வாழ்வு.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்த சுங்கை சிப்புட்டில் தற்போதைய எம்பி டாக்டர் ஜெயக்குமார் அவர்களே உங்கைளை இரு கை எடுது வரவேற்கிறேன். நல்ல மனிதர், நல்ல தலைவர் இருந்தும் என்ன பயன் உங்களை போன்றவர்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் தேவை அதில் யாருக்கும் மறுப்பு இல்லை என்பது ஏன் கருத்து. எதுக்குமே பிரயோஜனம் இல்லாத ஒரு சில கட்சி தலைவர்கள் அறிக்கை மேல் அறிக்கை விடும் பொழுது உங்களை போன்ற நல்ல தலைவர்கள் ஏனைய பேச மாட்டிர்கள். அரசியலுக்கு பேச்சுதான் முக்கியம் அதுவும் சிறப்பான பேச்சுக்கள் மூலம் மக்கள் மனதை உங்கள் பக்கம் வைத்து கொள்ளலாம். அது உங்களிடம் பார்க்க முடிய வில்லையே. ஒன்றுமே பேசாமல் இருக்கும் உங்களை மக்கள் ஏற்று கொண்டு வாக்கு அளித்து தேர்தலில் வெற்றி மகுடம் சூட்றினார்கள். நீங்களோ உறக்கத்தில் இருந்து இப்போ தான் எழுந்து அறிக்கை எனும் போர்வையில் உங்கள் பினாமியை வைத்து பேச வைகிரிர்கள். நல்லதுதான் அனால் உங்கள் பினாமியின் அறிக்கைகள் உங்களை போன்று இல்லையே என்று தோன்றுகிறது. சரி விஷயத்திற்கு வருவோம். அதாவது நாங்கள் தனித்து நிற்க போகிறோம் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டிர்கள். அனால் நல்ல உள்ளம் கொண்ட டிஏபி அத்தொகுதி வேட்பாளராக பிஎஸ்எம் நிறுத்தினால், ஹராப்பான் விட்டுக்கொடுக்க தயார் என்று டிஏபி கூறியுள்ளது. இது ஏவ்வளவு பெரிய பெருதன்மை பார்த்தீர்கள டாக்டர் அவர்களே. அதுதான் வேண்டும் நமக்கு உங்கள் கட்சியில் இருக்கும் ஒரு சிறந்த நல்ல அரசியல் வாதி ஐயா திரு. எஸ்.அருட்செல்வன் அறிக்கைகள் விடும் பொழுது நன்கு கலந்து ஆலோசித்து அறிக்கைகள் விட்டாள் எங்களை போன்றோர் குழப்பம் அடையாமல் இருக்கும். நீங்கள் மறுபடியும் சுங்கை சிப்புட் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதே என் ஆவல். அனால் கவனமாக காயை நகர்தினால் வெற்றி வாய்ப்பு உங்களுக்கே. அதை விடுது கோமாளிதனம்மான அறிக்கைகள் விட்டாள்…என்ன சொல்வது. உறக்கம் கலைந்து வந்து இருக்கும் உங்களை வரவேற்கிறேன். நன்றி
ஒருவர் நல்ல சேவையைக் கொடுத்தால் உடனே அவரை எப்படித் தூக்குவது என்று திட்டம் போட ஆரம்பித்து விடுகிறார்கள் ஒரு கூட்டத்தினர்! மக்கள் நலனை எந்த நாயும் பார்ப்பதில்லை! மன்னிக்கவும்!
கூட்டு சேருங்கள் நல்லது