பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின்னர் மகாதிர் முகமட் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாரை சந்திக்கிறார்.
கடந்த நவம்பரில் தோள்பட்டை அறுவைச் சிகிட்சைக்குப்பின் அன்வார் குணமடந்துவரும் செராஸ் மருத்துவமனை மறுவாழ்வு மையத்தில் நாளை இச்சந்திப்பு நடைபெறும்.
இது குறித்த தகவல் ஊடகங்களுக்கு பிகேஆர் அனுப்பியுள்ள அழைப்பில் கூறப்பட்டுள்ளாது.
மகாதிர் பிரதமர் வேட்பாளராக ஹரப்பான் மாநாட்டில் நியமிக்கப்பட்டதில் சில தரப்பினர் அதிருப்தி கொண்டுள்ளனர், குறிப்பாக பிகேஆரிலுள்ளவர்கள்.
சிலாங்கூர் பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஹிஸ்வான் அஹமட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகாதிர் ஒரு மூத்த அமைச்சராக மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் வனிதா தலைவர் ஸுரைடா கமாருடின் வலியுறுத்தினார்.
ஹரப்பான் கூட்டணியின் முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக அன்வார் அவரது செய்தியில், அவரது மகளும் பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இஸ்ஸாவால் வாசிக்கப்பட்டது, கூறியிருந்த போதிலும் மகாதிரின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொண்ட மகாதிர், அன்வாருக்கு நன்றி கூறினார்.