ஹுடுட் சட்டத்தின் கீழ், திருடர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் கையை அறுவைசிகிச்சையின் வழி துண்டிக்க, மருத்துவர்களைப் பயன்படுத்தலாம் எனும் கிளாந்தான் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு மூன்று முஸ்லீம் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை எனும் தங்கள் தொழில்முறை உறுதிமொழிகளை அது மீறுவதாக, அந்த டாக்டர்கள் எஃப்.எம்.தி.-யிடம் கூறியுள்ளனர்.
அண்மையில் நடந்த ஒரு நேர்காணலின் போது, கிளாந்தான் துணை முதலமைச்சர் முகமட் அமார் நிக் அப்துல்லா, கை துண்டிக்கப்படுபவருக்கு உடலில் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அத்தண்டனையை நிறைவேற்ற நிபுணத்துவ மருத்துவர்களின் சேவை தேவைபடுவதாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதாக தெரிவித்தார்.
“முதலில், தீங்கு செய்யாதே” என்ற, மருத்துவர்களின் உலகளாவியக் கொள்கை பற்றி
அமர் அறிந்திருக்க மாட்டார் என்று இஸ்லாம் ரெனைசோன்ஸ் ஃப்ரான்ட்-இன் இயக்குநர் அஹ்மாட் ஃபரூக் முசா கூறினார்.
முகமட் அமரின் முன்மொழிவில், “தார்மீக பிழை” புறக்கணிப்பு உள்ளது என்று இருதய
அறுவை நிபுணருமான ஃபரூக் தெரிவித்தார்.
“உலகின் மிக உயர்ந்த தொழிலான மருத்துவத்துறையை அவர் அறிந்திருக்க வேண்டும், மதத்தின் பெயரில் மனிதர்களுக்கு எதிரான, கொடூரமான நடவடிக்கைகளை முன்வைப்பது தவறான செயலாகும்.
“அறுவை சிகிச்சை நிபுணர்களான நாங்கள் , மனித நோய்களையும் துன்பங்களையும் குணப்படுத்தும் கடவுளின் கருவிகளாக உலகில் இருக்கின்றோம். ஆக, அத்தகைய தண்டனைகளை நிறைவேற்ற எங்களைப் பரிந்துரைப்பது நியாயமற்றது, மேலும் இது ஜெனீவா உடன்படிக்கைகளை மீறும் செயலாகும். ஆரோக்கியமற்ற எண்ணங்கள் கொண்டவர்களே அத்தகைய செயல்களைப் பற்றி நினைப்பார்கள்.”
அத்தகைய நடைமுறைகள் மருத்துவர்களின் பணிக்கு அப்பாற்பட்டது, எனவே அப்பணிக்கு மருத்துவர்களை நியமிக்கக் கூடாது என்று மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை விரிவுரையாளரான டாக்டர் சித்தி மரியா கூறினார்.
“ஹுடுட் ஒரு குற்றவியல் சட்டம்,” என்று அவர் கூறினார். “ஆக, குற்றவியல் சட்டத்தை இயக்கும் ஒரு நபர்தான் அதனை நிறைவேற்ற வேண்டும். உயிர்களை காப்பாற்ற தொழில்முறை உறுதிமொழி எடுத்துகொண்ட மருத்துவர்களை செய்யச் சொல்லி நீங்கள் கேட்க முடியாது.
“ஹூடுட் நடைமுறையில் உள்ள நாடுகளில், தண்டனையை நிறைவேற்றுவது டாக்டர்கள் அல்ல. ஒரு நபரைத் தண்டனைக்கு உட்படுத்த முடியுமா என்பதை மட்டுமே டாக்டர் உறுதிப்படுத்த முடியும்.”
ஹுடுட்டைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டும் பாஸ், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதைப் பற்றி பொது மக்களுக்கு முழுமையாக விளக்கப்படுத்தவில்லை என்று கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தி மரியாம் பாஸ்-ஐ விமர்சித்தார்.
“நாம் இன்னும் வறுமையை ஒழிக்க முடியவில்லை, எந்த வகையான திருட்டுக்கு ஹுடுட் சட்டம் பயன்படுத்தப்படும் என்று மக்களிடம் விளக்கவில்லை. மில்லியன் கணக்கான டாலர்களைத் திருடியவர்களை என்ன செய்யப்போகிறோம்? மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்களை என்ன செய்யப்போகிறோம்? ஹுடுட்டில் ‘திருட்டு’ என்றால் என்ன என்பதை நீங்கள் வரையறுக்க வேண்டும்,” என்றார் அவர்.
அமரின் அறிக்கை “முட்டாள்தனமானது” என்று கலிபோர்னியாவில் வசிக்கும் அறுவை சிகிச்சை நிபுணரான எம்.பக்ரி மூசா விவரித்தார்.
“உண்மையில், அந்த அறிக்கை அரசியல்வாதிகளாக தங்களை மாறுவேடமிட்டு
கொண்டிருக்கும் பாஸ் உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட பிற அறிக்கைகள் போலவே உள்ளது,” என்று அவர் கூறினார்.
“ஆட்சியில் இருந்துகொண்டு, மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் நிலையில் இருக்கும் அவர்கள் (பாஸ்), அதனைச் செய்யாது கைகளை வெட்டுவது போன்ற விஷயங்களில் பிஸியாக இருக்கிறார்கள்.”
ஒரு மருத்துவர் என்ற முறையில், மக்களுக்கு உதவுவதே தங்கள் பணி என்றும், அவர்களின் பிரச்சனையை அதிகரிப்பது தங்களின் பணியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
“என் வேலை உயிர்களைக் காப்பாற்றுவது. நான் அதை செய்யமுடியவில்லை என்றால், குறைந்தபட்சம் நான் நோயாளிகளுக்கு உதவ முயற்சிப்பேன், அவர்களுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்க மாட்டேன். கைத் துண்டிக்கப்பட்ட மனிதனுக்கு யார் உணவளித்து காப்பாற்றுவது?” என்றும் அரசியல் விமர்சகருமான அவர் கேட்டார்.
ஹூடுட் போன்ற திட்டமிடப்படாத திட்டங்களைப் பற்றிய அறிக்கையை வெளியிடுவதை விட, மாநிலத்தில் உள்ள மற்ற பிரச்சனைகளில் கிளாந்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஃபரூக் கூறினார்
“துணை முதலமைச்சர் என்ற வகையில், கடந்த ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எதனையும் கிளாந்தான் பதிவு செய்யவில்லை என்பதை அமர் அறிந்திருக்க வேண்டும்.
இளைஞர்கள் மத்தியில் மிக உயர்ந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஏய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக கிளாந்தான் உள்ளது. இது பாஸ் நிர்வாகத்தில் தோல்வி ஏற்பட்டுள்ளதையேக் காட்டுகின்றது.
“அவர் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியது அவசியம் இல்லையா, குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, தேசிய சராசரியை விட மூன்றில் ஒரு பகுதியே இருப்பது?”
குற்றச் செயலை தடுக்க இது சரியான முறையல்ல.
Intha