சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை பக்கத்தான் ஹரபான் தலைவர் டாகடர் மகாதிர் முகம்மட்டுக்கு விட்டுக்கொடுப்பதில் ஓர் உள்நோக்கம் இருப்பதாகக் கூறுகிறார் சிலாங்கூர் பாஸ் தலைவர் ஒருவர்.
அதை ஓர் ஆபத்தான இடமாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கருதுகிறார்போலும் அதனால்தான் அங்கு மகாதிர் போட்டியிட்டு மண்ணைக் கவ்வட்டும் என்று அத்தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்திர்ருக்கிறார் என பாஸ் ஆராய்ச்சி இயக்குனர் முகம்மட் ஸுடி மர்சுகி கூறினார்.
“கோம்பாக் தொகுதியை விட்டுக் கொடுக்கும் நோக்கம் என்னவென்பது எனக்குத் தெரியாது. ஆனால், மும்முனைப் போட்டி என்று வந்தால் அது பிகேஆருக்குப் பாதுகாப்பான தொகுதி அல்ல”, என்றார்.
“அதனால் மகாதிர் இங்கு போட்டியிட்டால் அது அவர் பிரதமராவதைத் தடுக்கும் முயற்சியாகவே இருக்கும்”, என்றாரவர்.
நீங்கள் மஹாதீருக்கு பயப்படுவது நன்றாகவே புரிகிறது.