கெராக்கான் தலைவர் மா சியு கியோங், தங்கள் கட்சி 14வது பொதுத் தேர்தலில் பினாங்கில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்று நம்புகிறார்.
“பினாங்கு மாநில அரசைத் தட்டிக் கேட்க பினாங்கு மக்கள் ஒரு சில கெராக்கான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு”, என்றார்.
“பினாங்கில் டிஏபியால் வழிநடத்தப்படும் அரசுதான் ஆட்சி செய்யப்போகிறது. ஏனென்றால் கடந்த முறை 19 இடங்களில் போட்டியிட்ட டிஏபி எல்லா இடங்களையும் வென்றது.
“இதற்குமுன் அவர்கள் தோற்றதில்லை. அதனால் அவர்களுக்குத் திமிர் வந்து விட்டது . இம்முறை பினாங்கில் சாதிப்போம் என்ற நம்பிக்கை வந்துள்ளது”, என இன்று செராஸில் கெராக்கான் தலைமையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
பினாங்கைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கெராக்கான் 2008 பொதுத் தேர்தலில் டிஏபி-இடம் தோற்றது.
14வது பொதுத் தேர்தலில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 45 இடங்களில் போட்டியிடப்போவதாக மா கூறினார்.
அதன் வேட்பாளர்கள் பல இனங்களையும் சேர்ந்தவர்கள். 60 விழுக்காட்டினர் புதுமுகங்கள் என்றாரவர்.
கடந்த காலத்தில் மசீசவுடன் கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருந்ததாகவும் 14வது பொதுத் தேர்தலில் கருத்துவேறுபாடுகளையெல்லாம் புதைத்துவிட்டு இரண்டும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காணல் நீர்!
கனவுகாண்பது அவரது உரிமை
பட்டப்பகல் கனவு பலிக்காது
என்று சொல்லக்கேல்வி
போன தேர்தலில் பிரதமர் சொன்னார் நம்பிக்கை நம்பிக்கை என்று ! இந்த தேர்தலும் வந்து விட்ட்து ! நம்பிக்கைக்கு தும்பிக்கை முளைத்ததுதான் மிச்சம் ! வேற எதுவும் மாறல…. இருந்தாலும் மா இ கா வெக்க படாம சொல்லும் ” JANJI DITEPATI ” என்று ! எதிர்க்கட்சி சொல்லும் ” JANJI DICAPATI ” என்று …