பிரதமர் பதவி இரண்டு தவணைக்கு மட்டுமே: ஹரபான் வரையறுக்கும்

பக்கத்தான்  ஹரபான்  ஒருவர்  இரண்டு  தவணைகளுக்கு  மட்டுமே   பிரதமராக   இருக்க  முடியும்   என   வரையறுக்கும். அத்துடன்   அதன்    ஆட்சியில்   பிரதமராக  இருப்பவர்  நிதி  அமைச்சராகவும்   இருக்க  முடியாது.

இப்பரிந்துரைகள்       அந்த  எதிரணிக்  கூட்டணியின்   தேர்தல்  கொள்கையறிக்கையில்    இடம்பெற்றிருப்பதாக   பெர்சத்து  உதவித்   தலைவர்   முக்ரிஸ்  மகாதிர்   கூறினார்.

மேலும்,  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ்,  சட்டத்துறைத்    தலைவர்,   தேர்தல்   ஆணையத்    தலைவர்,  எம்ஏசிசி    தலைவர்,  தலைமைக்  கணக்காளர்   ஆக்கியோர்  இப்போதுள்ளதைப்  போல்   பிரதமரின்  பரிந்துரையிபேரில்   நியமனம்   செய்யப்பட    மாட்டார்கள்.  நாடாளுமன்றத்தின்வழியேதான்     நியமனம்   செய்யப்படுவார்கள்.

இன்று  கோலாலும்பூரில்  சித்தியா   வங்சா   தொகுதியைத்   தொடக்கிவைக்கும்  நிகழ்வில்   முக்ரிஸ்   இத்தகவலை   வெளியிட்டார்.