மலேசியர்களைப் போல், பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு சவுதி அரேபியர்கள் கடுமையாக புகார் எதனையும் செய்வதில்லை என்று பிரதமர் நஜிப் இரசாக் கூறியுள்ளார்.
“எண்ணெய் விலை ஏற்றம் காண்கிறது, நாம் 3 சென் தான் அதிகரிக்கிறோம், மக்கள் புகார் செய்கின்றனர்.
“அங்கு (சவுதி அரேபியா) நேற்று 136 விழுக்காடு ஏறியது, அவர்களும் புகார் தெரிவித்தனர், ஆனால் நம்மைப் போல் அல்ல,” என்று இன்று, கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில், பணி ஓய்வுபெற்ற 5,000 போலிஸ்காரர்களிடையே பேசிய அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரிகளை அமல்படுத்துவதில், சவூதி அரேபியா மலேசியாவை உதாரணமாகக் கொண்டுள்ளது, அந்நாட்டிற்குச் செல்லும் மலேசியர்கள் அங்கு செலுத்தும், ஜிஎஸ்டிக்குப் புகார் கூறுவது இல்லை என்றும் அவர் கூறினார்.
“மலேசியாவில் மட்டும் அவர்கள் புகார் கூறுவார்கள்,” என்று கடந்த வாரம், பணி நிமித்தமாக சவூதி அரேபியா சென்றுவந்த நஜீப் கூறினார்.